No results found

    மத்திய அரசு ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்


    பாராளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து, நாட்டில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ளடக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்துள்ளதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கேலோ இந்தியா உள்பட எந்தத் திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال