டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தின் விரிவாக்க கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:- பாஜக ஒரு சிறிய அரசியல் அமைப்பாக இருந்து, உலகின் மிகப்பெரிய அமைப்பாக உயர்ந்ததற்கு தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகமே காரணம். பாஜக தனது அரசியல் பயணத்தை வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் தொடங்கியது. 2019-ல் அது 303ஐ எட்டியது. இப்போது பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறோம். குடும்பங்களால் இயக்கப்படும் அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பான் இந்தியா கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் செல்வாக்கு மிக்க ஒரே பான் இந்தியா கட்சியாக பாஜக திகழ்கிறது. பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. நவீன மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே கட்சியின் ஒரே குறிக்கோள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குடும்பம் அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பா.ஜ.க. மட்டுமே பான் இந்தியா கட்சி: பிரதமர் மோடி பேச்சு
Tamil News