No results found

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூசணிக்காய்


    நமக்கு சில காய் கறிகளைப் பார்த்தால் இளக்காரமாய் இருக்கும். அதை பார்ப்பதும், வாங்குவதும், சாப்பிடுவதும் கவுரவக் குறைவாகத் தோன்றும். அதில் ஒன்றுதான் மஞ்ச பூசணி எனப்படும் பரங்கி காய். அதிகம் வறுத்த உருளை சிப்ஸ் பார்க்க ஸ்டைல்தான். ஆனால் கொடுக்கும் பாதிப்புகள் ஏராளம். அது போல் இந்த மஞ்ச பூசணி பார்க்க ஸ்டைல் எதுவும் கிடையாது. கலர் கொஞ்சம் அழகு. ஆனால் இது கொடுக்கும் நற்பயன்கள் எத்தனை தெரியுமா? பல வீடுகளில் இவை சர்வ சாதாரணமாய் விளையும். அதனாலேயே மதிப்பு தெரிவதில்லை. சரி இப்போது தெரிந்து கொள்வோம். மஞ்ச பூசணி நிறைய சத்துகள் கொண்டது. சுமார் 245 கி மஞ்ச பூசணியில் கலோரி சத்து 49தான். வைட்டமின் 'ஏ' சத்து மிகுந்தது. வைட்டமின் சத்துகள், தாது உப்புக்கள் நிறைந்தது. அதிக நீர் சத்து கொண்டது.

    *அதிக அளவில் ஆன்டியாக்சிடன்ட் இருப்பதால் சில கடும் நோய்களின் பாதிப்பினை வெகு அளவில் குறைக்கும் தன்மை கொண்டது. *இத்தனை வைட்டமின் சத்துகள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகின்றன. *கண் பார்வை நன்கு பாதுகாக்கப்படுகின்றது. * உடல் எடை குறைய விரும்புபவர்கள் மஞ்ச பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். *புற்று நோய் பாதிப்பினை அதிக அளவில் தவிர்க்கின்றது. *பொட்டாசியம், வைட்டமின் 'சி' சத்து, நார் சத்து இவை இருதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன. *சரும ஆரோக்கியம் சிறப்பாய் இருக்கின்றது. *சமைப்பது எளிது. சூப் மற்றும் கூட்டு, பொரியல் என எடுத்துக் கொள்ள முடியும்.

    இதற்கு மேல் என்ன வேண்டும். அடுத்து வெள்ளை பூசணிகாய்: சர்வ சாதாரணமாய் கிடைப்பது. அமாவாசை மற்றும் சில முக்கிய நாட்களில் மட்டுமே விலை அதிகமாக இருக்கும். காரணம் திருஷ்டி, தீய சக்திகளை விரட்டும் என வீட்டுக்கும், ஆளுக்கும் சுற்றி நடுரோட்டில் உடைப்பார்கள். வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும் என்பார்கள். இதனை உணவு மருத்துவம் சற்று மாற்றிச் சொல்லுகின்றது. உட்கொள்ளும் பொழுது உடலில் உள்ள தீயவை நீங்கும். அவ்வளவுதான். *வெள்ளை பூசணி மிகவும் குறைந்த கலோரிசத்து கொண்டது. 100 கிராம் வெள்ளை பூசணியில் 26 கலோரிகள் உள்ளன. வைட்டமின்களும், தாது உப்புகளும் கொண்டது.

    *பூசணி விதை சிறந்த சத்துகளை உடையது. *நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. *கண் பார்வைக்கு சிறந்தது. *சருமப்பாதுகாப்பிற்கு உதவுவது. *இருதய பாதுகாப்பிற்கும் சிறந்தது. *உடல் செயல்பாட்டுக்குத் திறன் கூட்டுகின்றது. *சமைப்பது நமக்கு பழக்கமான ஒன்று. அதற்காக பூசணிக்காய் அல்வா என்றெல்லாம் வேண்டாம். பெரிய சேனை இந்த பெரிய சேனை தோல் சொர சொரப்பாக பெரிதாக இருக்கும். இதனை கடையில் பார்க்கும் பொழுதே பலர் நகர்ந்து விடுவர். பார்ப்பதற்கு அதற்கு தோற்றப் பொலிவு கிடையாது. இதனை யானையின் பாதம் போல் இருப்பதாக ஆங்கிலத்தில் பெயர் உண்டு. ஆனால் இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம். இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    *சிலருக்கு இந்த உணவு ஒவ்வாமை தரலாம். இதனை நன்கு சுத்தம் செய்தே சமைக்க வேண்டும். *கலோரி சத்து கொண்டது. கொழுப்பு, மாவு சத்து, புரதம், பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் பி6, 1 பிரிவுகள் மற்றும் போலிக் ஆசிட், கியாலின், பீட்டா கரோடின் கொண்டது. *வீக்கத்தினை குறைக்க வல்லது. கொலஸ்டிராலினை கட்டுப்பாட்டில் வைக்கும். *சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளலாம். *புற்று நோயினைத் தவிர்க்க வல்லது. *நார் சத்து மிகுந்தது என்பதால் எடை குறைக்க உதவும். *பைல்ஸ் பிரச்சினைகளுக்கு இதனை நல்ல உணவாக உபயோகிக்கலாம். * மூட்டு வலியினை குறைக்க வல்லது. பொதுவாக ஏதேனும் மருந்து எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்தான் பெரிய சேனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை உடையவர்கள், தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோர் பெரிய சேனையினைத் தவிர்ப்பது நல்லது. பெரிய சேனையினைப் பற்றிய ஆய்வு கட்டுரையின் கருத்துக்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன. பொதுவில் இது ஜீரண சக்தியினை அளிப்பதாலும் வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாலும் இதனை பயன்படுத்துகின்றனர். சின்ன சேப்பங் கிழங்கு இதில் சின்ன என்று சேர்த்திருப்பதன் காரணம் புரிய வேண்டும் என்பதற்காகத்தான். வேக வைத்தால் கொழு கொழுப்பு தன்மை இருக்கும். இதனை பலர் தவிர்ப்பர். பலர் மொறு மொறுவென நிறைய எண்ணை விட்டு ரோஸ்ட் செய்து காரம் சேர்த்து அதன் நன்மைகள் எதுவும் கிடைக்காத வண்ணம் செய்து விடுவர். வீடுகளில் குறிப்பாக கேரளாவில் சர்வ சாதாரணமாய் கிடைக்கும். முதலில் இதன் இலைகள் தரும் பயனைப் பார்ப்போம். *ஒரு கப் இலை ஒரு நாள் முழுவதற்கும் தேவையான வைட்டமின் சத்தினைத் தருகின்றது. *வைட்டமின் சி சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட வல்லது. *இதில் உள்ள நார் சத்தால் உடலில் கொழுப்பு குறைகின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது. *இதில் உள்ள போலேட்சத்து இதய நோய்களில் இருந்து காக்கின்றது. *புற்று நோய் தடுப்புக்கு உதவுகின்றது. *செரிமானம் சீராகின்றது. *குறைந்த கலோரி சத்து கொண்டது. சேப்பங் கிழங்கும் ஒரு கப் அளவில் சுமார் 7 கிராம் நார் சத்து கொண்டது. இதனால் உடல் எடை குறையும். கொழுப்பும் குறையும். ஜீரண சக்தி அதிகரிக்க உதவுகின்றது. கண் பார்வை கூர்மைத் திறன் பெறுகின்றது. ரத்த அழுத்தம் சீராய் இருக்கும். இருதய மண்டலத்தின் அழுத்தம் குறைகின்றது. இலையோ, கிழங்கோ நன்கு வேக வைக்கும் பொழுது நச்சுத் தன்மைகள் நீங்குகின்றன. சாதாரண பொருட்களிலும் இயற்கை மனிதனுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகின்றது. இப்படித்தான் சாதாரண தெரிந்த செய்தியான தண்ணீர் குடிப்பது இன்னமும் முழுமையாய் பலர் கடைபிடிப்பதில்லை. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி 1 அல்லது 2 கிளாஸ் நீர் குடிப்பது நமது நிணநீர் மண்டலத்தினை சீராய் வைக்கும். உடலின் செயல்பாட்டுத் திறன் கூடும். நச்சுப் பொருட்கள் வெளியேறும். சருமம் சுத்தமாய் இருக்கும். திசுக்கள் நன்கு வேலை செய்யும். ஆக இனியாவது காலையில் 1 அல்லது 2 கிளாஸ், நீர் குடிப்போம். மேலும் சில நன்மை தரும் உணவுகளைப் பார்ப்போம். *மீன் *புரோக்லி *பீட்ரூட் *பசலை மற்றும் கீரை வகைகள் *பச்சை காய்கறிகள் *மாம்பழம் *பாதாம் 4 முதல் 6 *அடர்ந்த சாக்லேட் இவைகளை நாம் எடுத்துக் கொள்கிறோமா? (மூட்டு வலி இருப்பவர்கள் சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது) என்கின்றனர் ஆய்வாளர்கள். மூட்டுகளில் வீக்கம் ஏற்படும் போது இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வராவிடில் சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். மூட்டு வலி என்பது கை, கால் அசைவுகளில் வலி, இறுக்கம், வீக்கம் என இருக்கும். மூட்டு வலியில் பல பிரிவுகள் இருந்தாலும் பொதுவில் இந்த பாதிப்பின் பொழுது சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. *அதிக பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. *புகையிலை, மது கூடவே கூடாது. *கார்ன் எண்ணை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டும். *கோதுைம உணவை தவிர்க்க வேண்டும். *வறுத்த, பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். *சர்க்கரை வீக்கத்தினை கூட்டும். எனவே சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். *மைதா போன்ற வகைகளை அனைவருமே தவிர்க்க வேண்டும். எடுத்துக் கொள்ளக் கூடிய உணவாக- *சோயா பீன்ஸ் *முழு தானியம் *கிரீன் டீ *பூண்டு *ஒமேகா3 *வைட்டமின் 'சி' சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை தாராளமாய் எடுத்துக் கொள்ளும்போது உடலில் சத்துக்கள் அதிகரிக்கும். வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, நார் சத்து என உடலின் ஊட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஆயுள், ஆரோக்கியம் கூடும். நோய்கள் நெருங்காது. குடல், எலும்பு, கண்கள், மனநிலை இப்படி எல்லாமே மிகச்சீராய் இருக்கும். வீக்கங்கள் இருக்காது. மற்றொரு விஷயமும் இங்கு குறிப்பிட வேண்டும். சற்று குளிராய் இருக்கின்றது என குளிப்பதனைக் கூட ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்கின்றனர். இவர்களுக்கு பாக்டீரியா மற்ற கிருமிகள், வியர்வை, அழுக்கு, துர்நாற்றம் என ஏற்பட்டு அருகில் இருப்பவர்களாலும் தாங்க முடிவதில்லை. தினமும் இருவேளை குளிப்பது அவசியம் என்றாலும் ஒரு வேளையாவது குளியுங்கள் என்பதே வேண்டுகோள். வீட்டு உதவியாளர்களை குளிக்காமல், தலை, நகங்கள் சுத்தமாய் இராமல் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். சமீபத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தன்று நிகழ்ந்த சில கருத்து பரிமாற்றங்கள், ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த சில வருடங்களாக 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறப்பட்டது. இந்த பாதிப்பால் வருடந்தோறும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளதாக குறிபிடப்பட்டது. உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி இவைகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. மாவு சத்து அளவினை அதாவது கலோரி சத்து குறைந்த உணவின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும் சில உணவுகளும் கூறப்பட்டிருந்தன. அவைகளை பிறகு வரும் கட்டுரைகளில் பார்ப்போம். இவைகளை உணவு போல் சாப்பிடக்கூடாது. ஓரிரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்வதே நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி. தியானம் செய்வதனை அன்றாடம் கடை பிடிக்க வேண்டும். மூளையின் செயல்பாட்டினை கூர்மையாக்கும். மன அமைதி கிடைக்கும். கவனிக்கும் திறன் கூடும். இத்துடன் 'ஸ்ட்ரெஸ்' நன்கு குறையும். ஸ்ட்ரெஸ் கூடினாலே சர்க்கரை பாதிப்பு ஏற்படும். மூச்சு பயிற்சி, தியான பயிற்சி, நடை பயிற்சி, உடற்பயிற்சி என குறைந்தது ஒவ்வொன்றையும் 10 நிமிடங்களாவது செய்யுங்கள். காலை-மாலை இருவேளையும் செய்ய வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال