No results found

    சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு


    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அன்று நிறைவேற்றப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். இந்நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு உடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின் போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்குமாறு எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال