No results found

    உலகளவில் இணைய சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடம்


    உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய சேவைகள் முடங்கியுள்ளது. தொடர்ந்து, ராஜஸ்தானில் 96 முறையும், உத்தரப் பிரதேசத்தில் 30 முறையும், மகாராஷ்டிராவில் 12 முறையும், தெலுங்கானாவில் 3 முறையும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 2022ம் ஆண்டில் அதிகபட்சமாக இந்தியாவில் 84 முறையும், உக்ரைனில் 22 முறையும், ஈரானில் 18 முறையும், மியான்மரில் 7 முறையும் இணைய சேவை முடங்கியுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக இணைய சேவைகள் முடக்கத்தில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் 106 முறையும், 2020ல் 109 முறையும், 2019ல் 121 முறையும் இந்தியாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உலக அளவில் இணைய சேவை நிறுத்தங்களில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருந்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال