இந்நிலையில் யாக பூஜை நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலின் ராஜகோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.மேலும் கும்பாபிஷேகத்திற்காக கோயிலுக்கு வரும் பக் தர்களுக்கு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கியது மத ஒற்றுமை க்கு எடுத்துக் காட்டாக இருந்தது மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி - முருகானந்தம் செயல் அலுவ லர் பாலசுப்ரமணியன்.அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சுற்று வட்டார பெருமக் கள் கிராம ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.300க் கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர் 'ஆலங்குடி தீயணை ப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவி னர் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள த ர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இந்த கோவில் 2-வது குருஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.இதை தொடர்ந்து கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சரியார்கள் பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, ஆலங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சிவாச்சாரியாகர்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இதே போல் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.