No results found

    ரெயில்வே இடத்தில் வீடு- 120 குடும்பத்தினருக்கு நோட்டீசு


    கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் அவர்கள் 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال