No results found

    இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது - பிரதமர் மோடி


    பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடலுக்கான மாதிரிகளை உள்நாட்டு தளத்தில் நாம் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சில நகர அமைப்புகள் பேரிடர் ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். இனி அவ்வாறு இருக்க முடியாது. புதிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும்போது பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். மொத்த அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال