No results found

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் சந்திப்பு


    ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் (60), அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், அகமதாபாத் சென்று அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் டெல்லி ராஷ்டிரபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்தார். இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    Previous Next

    نموذج الاتصال