No results found

    2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ்- அமைச்சர் நாசர் தகவல்


    சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்கள் கலைக்கப்படும். வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலத்தினர் தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் தட்டுப்பாட்டை போக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் 16-ந் தேதி(இன்று) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால் கடந்த சில நாட்களுக்கு முன் லாரிகளில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு பால் சீராக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال