No results found

    ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு மாநிலத்தின் சில பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பால் விநியோகம் தாமதமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். சென்னை மக்களின் தேவைக்காக தினமும் 14 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் வேளையில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பாலுக்கான தட்டுப்பாடு உள்ளது. இதனால் நுகர்வோருக்கு பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

    இப்படி அரசின் ஆவின் பால் நிறுவனத்தால் சரியாக பாலை விநியோகம் செய்ய முடியாத நேரத்தில் தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விற்பனை செய்வதில் ஏதேனும் குறை இருப்பின் அதனை சரி செய்து கொடுத்து, பால் கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியவற்றில் குறை இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் ஆவின் பால் எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் தட்டுப்பாடில்லாமல் பால் கிடைப்பதை உறுதி செய்துகொள்ள தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال