தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தபோதும் யாரும் புகாரளிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை யாரும் சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம். கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கலாஷேத்ரா விவகாரம்: புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- தெற்கு மண்டல கூடுதல் ஆணையர்
Tamil News