No results found

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் 6 மேம்பாலங்கள் அழகுபடுத்தும் பணி தீவிரம்


    சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள், 12 ரெயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில், முதல்கட்டமாக கோயம்பேடு மேம்பாலத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டிலும், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி ரெயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் ரெயில் நிலையம் வரை ரூ.45 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 5 மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகள் அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதேபோல, ராயபுரம் பாந்தியன் சாலை மற்றும் காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலை கலைவாணர் பாலத்தின் கீழ்ப்பகுதி, அடையாறு சர்தார் பட்டேல் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலை சந்திப்பு மேம்பாலம் என மொத்தம் 6 மேபாலங்கள் ரூ.௧௦ கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال