கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி குமரேஷ் பாபு, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
Tamil News