No results found

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி


    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    Previous Next

    نموذج الاتصال