பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. https://t.co/k9gZaDH0IM
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2023