இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன. கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம். இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர். ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.
கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம். கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது. முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன. பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.