அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதானல், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து 5வது நாளாக இன்று இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி- இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு
Tamil News