No results found

    ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்- தமிழ்நாடு அரசு தகவல்


    தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புனித ஹஜ் பயணிகள் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வருகிற 20-ந்தேதி வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. இந்திய ஹஜ் குழு இணையதளத்தின் (www.hajcommittee.gov.in) வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCoI' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 3.2.2024 வரையில் செல்லத்தக்க எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் காசோலை நகல் அல்லது ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال