No results found

    Google Tamil News | இதற்காகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்-அமைச்சர் பொன்முடி புது விளக்கம்


    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சிகளில் ஆற்றும் உரையின்போது புதிய கல்விக் கொள்கை, இந்துமதம், சனாதனம், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளை ஆளுநர் வெளியிடுவதாக அண்மையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை தூண்டி விட்டு பாஜக சிந்தனைகளை தூண்டுவதற்கு அவர்கள் (மத்திய அரசு) முயற்சி செய்து வருகிறார்கள். கேரளா, தமிழ்நாட்டில், மேற்கு வங்கத்தில் அதுதான் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைத்தான் தெரிவித்தார். மேற்கு வங்க அரசை எதிர்த்ததால், அந்த மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று விட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கூட தமிழக அரசை எதிர்த்தால் உயர் பதவி பெறலாம் என்று எண்ணத்தில் கூட இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال