வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கே நகர்ந்து தமிழகத்தைக் கடந்து அரபிக் கடலை ஆடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Andaman and Nicobar
area forming
center
Google Tamil News
information
meteorological
new low pressure