திண்டுக்கல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவின் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், 'பிரதமர், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைவர்கள் தங்குமிடம், செல்லும் வழிகள், பங்கு பெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாசவேலைக்கு எதிரான சோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் 2 பேருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Google Tamil News | உளவுப்பிரிவு எச்சரிக்கை: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Tamil News