சென்னை நுங்கம்பாக்கம் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், தமிழை மேலும் பிரபலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் கடந்த மே மாதம் இங்கு வந்த போது பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். தமிழகம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்றும், தமிழ் மொழி நிரந்தரமானது, அதன் கலாச்சாரம் உலகளாவியது என்றும் பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்தார். தமிழ் மொழியின் சிறப்பையும், தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிரபலமான கவிதையை மேற்கோள்காட்டி பேசினார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரோ ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்றும் அப்போது பிரதமர் கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சி முறை, எதிர்காலத்திலும் நிலைத்து, நீடித்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும். கடந்த 20 ஆண்டுகளின் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமராக மோடி பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை என்றும், உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது. இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.
Google Tamil News | பிரதமர் மோடியின் ஆட்சி நீடித்து நிலைத்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும்- மத்திய மந்திரி உறுதி
Tamil News