No results found

    இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி | Google Tamil News


    இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாயில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال