மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதி ஆணையத்தின் ஆண்டுக்கூட்டம் அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் ஏலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இந்தியாவின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஐரோப்பிய யூனியன் பொருளாதார ஆணையரான பாவ்லோ ஜெண்டிலோனியை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தலைவர்களும் தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
commissioner
discusses
economic
economy
eu
global
Google Tamil News
India
meets
sitharaman
situation