இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி இன்று ஆர்ப்பாட்டம் | Google Tamil News
Tamil News