No results found

    ஆரணி அருகே நரபலி வதந்தி- வீட்டு கதவை உடைத்து 6 பேரை மீட்ட போலீசார் | Google Tamil News


    கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. கேரளாவை போன்று இங்கும் நரபலி கொடுக்கப்படலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் கதவை உடைத்தனர். தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர்.

    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال