சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து சதீசை 28ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்திய பிரியா ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ரெயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் | Google Tamil News
Tamil News