No results found

    Google Tamil News | இந்த முறை கார்கில்... பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி


    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

    2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    Previous Next

    نموذج الاتصال