No results found

    பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் - நிதிஷ்குமார் உறுதி

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. அல்லாத கூட்டணிக்கு கிடைக்குமானால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என தெரிவித்தார்.
    Previous Next

    نموذج الاتصال