No results found

    தமிழ் மொழியின் வளம் இந்திய நாகரீக வளர்ச்சியை பிரதிபலிக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

    சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதன் இயக்குநர் இரா. சந்திரசேகரன், காணொலி காட்சி மூலம் ஆளுருக்கு விளக்கினார். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு வசதிகளை ஆளுநர் பார்வையிட்டார்.

    அப்போது பேசிய ஆளுநர், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ் மொழியின் வளம், இந்திய நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

    இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு, தமிழ் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்றுக் கொள்ள வழிவகை செய்து, தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், பிற மாணவர்களுக்கு எளிய வழி தமிழ் கற்றல் அணுகு முறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது ஆக்கப் பூர்வமாகவும் எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Previous Next

    نموذج الاتصال