No results found

    இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சி அறிமுகம்

    8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பி.சி.சி.ஐ. இன்று அறிமுகம் செய்துள்ளது. மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இந்திய அணி இந்த புதிய சீருடையுடன் களம் இறங்குவார்கள். ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
    Previous Next

    نموذج الاتصال