No results found

    காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்

    தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சென்னையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில், அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை சுமார் 1044 நபர்களுக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டதில், தற்போது 364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் படியும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இன்புளூயன்ஸா காய்ச்சல் காரணமாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான அவசியம் இல்லை. பதற்றம் அடைய வேண்டிய சூழல் தற்போது இல்லை. இதற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் 365 நாட்களும் குழந்தைகள் படிக்காமல் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் வந்து விடும். எனவே தலைவர்கள் அறிக்கைகள் விடும்போது நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து, அறிக்கை விட வேண்டும். அதன் பாதிப்புகளை வைத்து பேட்டிகளின் மூலம் அறிக்கைகளின் மூலம் மக்களை பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Previous Next

    نموذج الاتصال