No results found

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 20 இடங்களில் வெற்றிபெறும்- மாநில பொறுப்பாளர் பேட்டி

    தமிழ்நாடு பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு சார்பில் 3 நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் அசோக் எம் நீட்டி எம்.பி. கூறியதாவது:- நான் தற்போது தமிழகம் உட்பட 6, மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் பழங்குடி மக்கள் 6 சதவீதம் உள்ளனர் ஆனால் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. பழங்குடி மக்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ் உட்பட அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    பா.ஜக. தமிழகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும். தற்போது தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. இதைவிட மோசமாக இருந்து ஆட்சியை பிடித்துள்ளோம். மும்பையில் தாராவி பகுதியில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் மகாராஷ்டிரா அரசு செய்து வருகிறது. 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக 400-க்கு அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது குறித்து இதுவரை பாராளுமன்றத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அது குறித்து அறிவிப்பு வெளியாகும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் தமிழகத்தில் தொடங்கி விட்டோம், கூட்டணி குறித்து அமித்ஷா மற்றும் நட்டா முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். உடன் மாவட்டத் தலைவர் வாசுதேவன், மாநில தலைவர் பண்பு, மாநிலச் செயலாளர் ஐ வி எல் கோவிந்தராஜ், ஈஸ்வர், உட்பட பலர் உடன் இருந்தனர்.
    Previous Next

    نموذج الاتصال