No results found

    பா.ஜனதாவில் போலி அமைப்பு உருவாக்கிய 3 பேர் நீக்கம்- அண்ணாமலை அதிரடி

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், ஸ்டீல் அருள் (மாநில செயலாளர் உள்ளாட்சி பிரிவு), கே.ராஜு, கருணாகரன் ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Previous Next

    نموذج الاتصال