No results found

    மந்தம், அஜீரணம் குணமாக

    மந்தம் அஜீரணம் குணமாக

    கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்து கொள்ளவும். சோற்றுடன் 1 ஸ்பூன் பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் மலக்கட்டு நீங்கும்

    சிறுநீர் எரிச்சல் குணமாக

    அன்னாச்சி பழசாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

    வாய்நாற்றம் போக

    நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றை குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும் இதனால் வாய் நாற்றம் தீரும்.

    சர்க்கரை வியாதி நீங்க

    கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

    தோல் வளம்பெற

    ஆல மரத்துப் பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது தோல் வளமாகும்.

    வரட்டு இருமல் தணிய

    எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

    கருப்பை கோளாறு நீங்க

    அரச இலை கொழுந்து 10லிருந்து 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கிருமிகள் சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

    மாதவிடாய் வயிற்று வலி தீர

    அத்திபழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.

    குடல் புண் குணமாக

    மஞ்சள் வறுத்து காரியானவுடன் பொடியாக்கி இந்த பொடியை சாப்பிட்டு வர குடல்புண் எதுவானாலும் குணமாகும்.

    காது குடைசல் குணமாக

    ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

    Previous Next

    نموذج الاتصال