சோகை நீங்க
குப்பைமேனி செடியை உலர்த்தி, தூளாக இடித்து பொடி 100 கிராம், மிளகு வறுத்து 10 கிராம் சேர்த்து கண்ணாடி புட்டியில் வைக்கவும். 3 மாதங்கள் 1/2 ஸ்பூன் அளவு காலை, மாலை பசும்பாலில் சாப்பிடவும். சோகை நீங்கும். ரத்தம் பெருகும். மருந்து சாப்பிடும் வரை புலால் உணவு கூடாது.
வாய்ப்புண் குணமாக
மாசிக்காயை நன்றாக தூள் செய்து இரண்டு சிட்டிகை ஒரு வேளைக்கு வீதம் நெய் அல்லது வெண்ணையுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். குடல் புண் குணமாகும்.
பித்தத்தை தவிர்க்க
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க
தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட குளுகோஸ் நேரடியாக உடலுக்குள் சேருகிறது.
கல்லீரல் பலப்படுத்த
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது. வைட்டமின் சி சத்து மற்றும் கால்சியம் இரும்பு சத்து உள்ளது.
உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு
உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திபழம் உதவும்.
இதயத்தில் பலம் கிடைக்க
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடைகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் சரியாக
டீ காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழசாறு பிழிந்து சாப்பிட்டு வர நல்லது.
குழந்தைகளுக்கு மந்தம்
கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து, குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசி எடுக்கும்.
குழந்தைகளுக்கு வாய்ப்புண்
குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால், இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.