No results found

    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வு

    ஒரு வணிக முயற்சியை தொடங்குவதற்கு அல்லது புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன், பகுப்பாய்வு செய்வதைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இதுபோன்ற பகுப்பாய்வு மாணவர்களுக்கும் பொருந்தும் ..இந்த பகுப்பாய்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. உங்கள் பலம் மற்றும் குறைபாடுகளை புரிந்துகொள்ள இது ஒரு அற்புதமான வழியாகும்.. ஸ்வாட் என்பது ‘ வலிமை’ ‘ பலவீனங்கள்’ ‘ வாய்ப்புகள்’ மற்றும் ‘அச்சுறுத்தல்கள்’ என்பதன் சுருக்கமாகும்..இது ஒரு மதிப்பீட்டு உத்தி என்றும் சொல்லலாம்..இந்த உத்தியை கையாண்டு உங்களது பலவீனங்களை கண்டுபிடித்து, உங்கள் பலத்தை மேம்படுத்தி உங்கள் எதிர்கால நடவடிக்கையை மிகவும் வலிமையானதாக தீர்மானிக்கமுடியும்.குறிப்பாக உயர் படிப்புக்காக செல்லும் மாணவர்கள் அடிப்படை திறன்கள் இல்லாதபோது பல்வேறு சிக்கல்களை சமாளிக்க வேண்டியுள்ளது..உங்களது திறமையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாத பொழுது இதுபோன்று நிகழ்கின்றது..

    ஸ்வாட் பகுப்பாய்வு ஏன் முக்கியமானது?

    முதலில் நம்மை நாமே அறிந்து கொள்வது நம் கனவுகளை நனவாக்குவதற்கான முதல் படி ஆகும். ஸ்வாட் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் கண்டறியப்படாத திறமைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையை ஆராய்வதற்கு ஒரு அருமையான தீர்வை வழங்குகிறது. மேலும், இது உங்கள் பலத்தை நீட்டிக்கவும் உங்கள் குறைபாடுகளை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டவும் உதவுகிறது. இவ்வாறு உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்து கொள்ளும் பொழுது நீங்கள் ஒரு சிறந்த நபராக வெளிப்படுவீர்கள்..வாய்ப்புகளைத் தேடும் பொழுதும், ஒரு கூட்டத்தில் தனித்து நிற்கவும், அச்சுறுத்தல்களை தவிர்க்கும் பொழுதும் ஒரு மாணவன் தனது பலம் மற்றும் பலவீனங்களில் கவனம் செலுத்த வேண்டும்.அதைச் சரியாக செய்ய, நம்மை நாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

    *பலம்:

    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வில் இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் பெற்ற திறன்கள் மற்றும் சாதனைகளை வரையறுக்கிறது.. தொழில்முறை அல்லது கல்வி கண்ணோட்டத்தில், நீங்கள் பெற்ற திறன்கள் மற்றும் தொழில்முறை அறிவை பட்டியலிடலாம்..விமர்சன சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் நேர மேலாண்மை திறன்கள் போன்ற உங்கள் ஆளுமை தொடர்பான மற்ற பலன்களும் உங்களது பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கலாம்..அதேபோல் வெவ்வேறு சூழ்நிலைகளை கையாள்வதில் நீங்கள் எவ்வளவு லாவகமாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்..

    *பலவீனங்கள்:

    கல்லூரிகளில் இணைவதற்கு முன்னர் நேர்காணல் குழுவை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. அவ்வாறு நேர்காணல் செய்பவர்களின் குழுவை எதிர்கொள்ளும்போது, உங்கள் ஸ்வாட் பகுப்பாய்வில் குறிப்பிடவேண்டிய நேர்மறையான புள்ளிகள் எதுவும் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.. அதேபோல் தேவைப்பட்டால் உங்கள் பலவீனங்களை பற்றி பேச வெட்கப்பட வேண்டாம்..உங்கள்பலவீனங்களை எதிரில் இருப்பவர்களுக்கு விளக்கும் பொழுது உங்களது பலவீனமானது உங்களை மிகவும் உண்மையானவர் ஆகவும் நம்பகமானவராகவும் காட்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்..

    *வாய்ப்புகள்:

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திறமை பெற்ற பிறகு, அவற்றை என்ன செய்வது என்று நீங்கள் சிந்திக்கலாம்.. வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதை விட, வாய்ப்புகளை நாமே தேடிச் செல்வது ஒரு நேர்மறையான பண்பாகும்.. ஆயிரக்கணக்கான வாய்ப்புகளில் இருந்து உங்களுக்குச் சிறந்தது, பொருத்தமானது என்று நீங்கள் நினைப்பதை தேர்ந்தெடுப்பது நீங்கள் உள்வாங்க வேண்டிய ஒரு திறமையாகும்.

    *அச்சுறுத்தல்கள்:

    உங்கள் வாழ்க்கை பயணத்தின் போது அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் போது நீங்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களை பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்கள் என்றால், இந்த சவால்கள் உங்களை வலிமையாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்..ஒரு பல்கலைக்கழகத்தில் வரையறுக்கப்பட்ட இடங்கள் தான் இருக்கின்றன என்பதை தெரிந்து அந்தக் கல்லூரியில் நுழைவதற்கு முயற்சி செய்யும்பொழுது அல்லது நேர்காணலில் கடினமான சவாலை எதிர்கொள்ளும் பொழுதும் ஏற்படும் சிரமங்கள் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை புரிந்துகொண்டால் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

    Previous Next

    نموذج الاتصال