No results found

    அபாக்கூக் ஆகமம்

    அதிகாரம் 1

    1 அபாக்கூக் என்னும் இறைவாக்கினர் கண்ட காட்சி.

    2 ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பேன், நீரும் செவி சாய்க்காமல் இருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு நான் "என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்!" என்று கதறுவேன், நீரும் என்னை மீட்காமல் இருப்பீர்?

    3 ஏன் நான் அக்கிரமத்தையும் கொடுமையையும் பார்க்கும்படி நீர் செய்கிறீர்? கொள்ளையும் கொடுமையும் என் கண் முன் இருக்கின்றன, பூசல் எழும்புகின்றது, எங்குமே போட்டி!

    4 ஆதலால் திருச்சட்டம் வலிமையிழந்தது, நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை@ ஏனெனில் கொடியவர்கள் நேர்மையுள்ளவர்களை மேற்கொள்ளுகின்றனர், ஆகவே நீதி நெறிபிறழ்ந்து காணப்படுகிறது.

    5 கண்களைத் திறந்து புறவினத்தார் நடுவில் பாருங்கள்@ பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடையுங்கள்@ ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நாம் ஒன்று செய்யப்போகிறோம், அதைக் கேள்விப்பட்டால் எவனும் நம்பமாட்டான்.

    6 இதோ, தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒரு முனை முதல் மறு முனை வரை ஓடித்திரிகிற கொடுமையும் விரைவும் கொண்ட இனத்தாரான கல்தேயர்களை நாம் எழுப்பப் போகிறோம்.

    7 அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகிறவர்கள், அவர்களின் நீதியும் பெருமையும் அவர்களிடமிருந்தே வருகின்றது@

    8 வேங்கையை விட அவர்கள் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன, மாலை வேளையில் திரியும் ஓநாய்களினும் கொடியவை@ அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்கின்றனர், இரையின் மேல் விரைந்து பாயும் கழுகைப் போலப் பறக்கின்றனர்.

    9 அவர்கள் அனைவரும் கொள்ளையடிக்கவே வருகின்றனர், அவர்கள் முகம் தீக்காற்றைப் போல வெப்பத்தை வீசுகிறது, கடற்கரை மணல் போலக் கணக்கற்றவர்களைச் சிறைப்படுத்துகின்றனர்.

    10 அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கிறார்கள், தலைவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்@ அரண்களையெல்லாம் பார்த்துச் சிரிக்கிறார்கள், மண் மேடுகளை எழுப்பி அவற்றைப் பிடிக்கிறார்கள்.

    11 புயற்காற்று திசை மாறிப் போய் விடுகிறது, தங்கள் வலிமையைக் கடவுளாய்க் கருதுகிறவர்கள் பாவிகள்.

    12 ஆண்டவரே, என் இறைவா, என் பரிசுத்தரே, தொன்றுதொட்டே நீர் இருக்கிறீர் அன்றோ? நாங்கள் சாவைக் காணமாட்டோம். ஆண்டவரே, அவர்களை எங்கள் மேல் தண்டனைத் தீர்ப்பாய் வைத்தீர், புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் நீர் அவர்களை ஆக்கினீர்.

    13 உம்முடைய தூய கண்கள் தீமையைக் காணக் கூசுகின்றன, நீர் கொடுமையைப் பார்க்கத் தாங்காதவர்@ தீமை செய்பவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்? தன்னிலும் நேர்மையானவனைப் பொல்லாதவன் ஒருவன் விழுங்கும் போது நீர் பேசாமல் இருப்பதெப்படி?

    14 மனிதர்களை நீர் கடல் மீன்களைப் போலும், ஆளுநன் இல்லாத ஊர்வனவற்றைப் போலும் நடத்துகிறீர்.

    15 அவர்கள் மற்றவர்களையெல்லாம் தூண்டிலால் பிடிக்கிறார்கள், வலையால் வாரி இழுக்கிறார்கள்@ தங்கள் பறியில் கூட்டிச் சேர்க்கிறார்கள், அகமகிழ்ந்து அக்களிக்கிறார்கள்.

    16 ஆதலால் தங்கள் வலைக்குப் பலி செலுத்துகிறார்கள்@ பறிக்குத் தூபம் காட்டுகிறார்கள்@ ஏனெனில் அவற்றால் அவர்கள் இன்ப வாழ்வு பெறுகிறார்கள், அறுசுவை உண்டியும் அவற்றால் கிடைக்கிறது.

    17 அப்படியானால், அவர்கள் தங்கள் வலையிலிருப்பதை விடாமல் கொட்டி, மக்களினங்களை இரக்கமின்றி எந்நாளும் கொன்று குவிப்பார்களோ?

    Previous Next

    نموذج الاتصال