No results found

    செப்போனியாஸ் ஆகமம்

    அதிகாரம் 1

     1 யூதாவின் அரசனாகிய அமோன் என்பவனின் மகன் யோசியாஸ் காலத்தில், எசேக்கியாஸ் மகன் அமாரியாஸ், இவர் மகன் கொதோலியாஸ், இவர் புதல்வன் கூசி, இவர் மைந்தன் செப்போனியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு.

    2 நிலப்பரப்பின் மேல் இருக்கும் யாவற்றையும் முற்றிலும் தொலைந்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.

    3 மனிதனையும் மிருகத்தையும் தொலைத்து விடுவோம், வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் தொலைத்து விடுவோம்: கொடியவர்களைக் கவிழ்த்து வீழ்த்துவோம், மனுக்குலத்தை நிலப்பரப்பில் ஒழித்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.

    4 யூதாவுக்கும் யெருசலேமின் குடிகள் அனைவர்க்கும் எதிராக நாம் கையை நீட்டுவோம்@ பாகாலை நினைப்பூட்டும் அடையாளங்களைக் கூடத் தகர்ப்போம்@ சிலைவழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் இவ்விடத்திலிருந்து அழிப்போம்.

    5 வான்படைகளுக்கு வீட்டுக் கூரையின் மேல் தலை வணங்கிப் பணிசெய்கிறவர்களையும், ஆண்டவரைப் பணிந்து அவர் பேரால் ஆணையிட்டு மிக்கோம் பேராலும் ஆணையிடுகிறார்களே அவர்களையும்,

    6 ஆண்டவரைப் பின்தொடராமல் புறங்காட்டித் திரும்புகிறவர்களையும், ஆண்டவரைத் தேடாமலோ, அவரைப் பற்றி விசாரியாமலோ இருக்கிறவர்களையும் அழித்துவிடுவோம்."

    7 இறைவனாகிய ஆண்டவர் முன் மவுனமாயிருங்கள்! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது@ ஆண்டவர் பலியொன்றை ஏற்பாடு செய்து, தாம் அழைத்தவர்களை அர்ச்சித்திருக்கிறார்.

    8 ஆண்டவருடைய பலியின் நாளிலே- "தலைவர்களையும், அரசனுடைய புதல்வர்களையும், அந்நிய ஆடை உடுத்தியுள்ள அனைவரையும் தண்டிப்போம்.

    9 அரசனின் அரியணையைச் சூழ்ந்திருப்பவர் அனைவரையும், தங்கள் தலைவனின் வீட்டை அக்கிரமத்தாலும், கொள்ளையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்போம்."

    10 ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளிலே- மீன் வாயிலிருந்து கூக்குரலும், நகரத்தின் புதுப்பேட்டையிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து பேரிரைச்சலும் கேட்கும்.

    11 மக்தேஷ் தொகுதியின் குடிகளே, புலம்புங்கள்@ ஏனெனில் வணிகர் யாவரும் அழிந்து போயினர், பணம் பெருத்த மனிதரெல்லாம் மாண்டு போயினர்.

    12 அக்காலத்தில், விளக்கேந்தி யெருசலேமை நாம் சோதித்துப் பார்ப்போம்: ~ஆண்டவர் நன்மையும் செய்யார், தீமையும் செய்யார்~ என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு வண்டல்கள் மேல் கிடக்கிற மனிதர்களைத் தண்டிப்போம்.

    13 அவர்களுடைய உடைமைகள் சூறையாடப்படும், வீடுகள் தரைமட்டமாக்கப்படும்@ அவர்கள் தங்களுக்கென வீடுகள் கட்டினாலும் அவற்றில் குடியிருந்து பார்க்கமாட்டார்கள்@ திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடித்துப்பார்க்கமாட்டார்கள்."

    14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது@ அண்மையில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது@ ஆண்டவரது நாளின் இரைச்சல் மனக்கசப்பைத் தருகிறது, வீரனும் கலங்கி அலறுகிறான்.

    15 கடுஞ்சினத்தின் நாளாம் அந்த நாளே, மனத்துயரும் வேதனையும் நிறைந்த நாளாம்@ பேரழிவும் பெருநாசமும் கொணரும் அந்நாள், இருட்டும் காரிருளும் சூழ்ந்த நாளாம், கார்முகிலும் அடரிருளும் படரும் அந்நாள்,

    16 அரண் சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும், எதிராக எக்காளமும் போர்முரசும் கேட்கும் நாளே.

    17 வேதனையை மனிதர்கள் மேல் வரச்செய்வோம், குருடர்களைப் போல் அவர்கள் தடுமாறுவர்@ ஏனெனில் ஆண்டவர்க்கு எதிராகப் பாவஞ்செய்தனர்@ அவர்களுடைய குருதி புழுதியைப் போலக் கொட்டப்படும், சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.

    18 ஆண்டவருடைய கோபத்தின் நாளிலே, அவர்களின் வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றமாட்டா@ அவருடைய ஆத்திரத்தின் கோபத்தீயால் உலகமெலாம் அழிக்கப்படும்@ மண்ணுலகின் குடிமக்கள் அனைவரையும் திடீரென முற்றிலும் அழித்துப் போடுவார்.

    Previous Next

    نموذج الاتصال