No results found

    பெண் கல்விக்கு உன்னத முயற்சி

    இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘பெண்களின் கல்வி’ என்ற தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடத்தில் மீண்டும் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. கிராமப்புற பெண்களின் கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். அதனை முன்னிறுத்தி இந்த கல்வி சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை. இதுவரை இந்தியாவில் 13 லட்சம் சிறுமிகள் இந்த நிறுவனத்தின் முயற்சியால் கல்வி பயின்றிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பொதுவான கல்வி அறிவைக்கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் அந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. ‘2022 தீர்வு வகுப்புகள்’ என அத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஸாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முக்கியமான 7 பாட பிரிவுகளில் கற்பிக்கவுள்ளனர். தொழில்முனைவோர்கள் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உரையாற்றுகிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் வாழும் பள்ளியில் சேராத மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இதற்காக தேர்வு செய்ய உள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال