அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆரஞ்சு நிறத்தாமரை ஆகும். இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த சாம்பல் நிறப் பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.
இடம் : பிறப்புறுப்புக்கு மேல்.
மூலக்கூறு : நீர்
ஆண் தெய்வம் : விஷ்ணு, இவர் காப்பவர், கரு நீல நிற மேனியுடன் தங்க நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார்.
பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
மிருகம் : பச்சை நிற முதலை, வருணனின் வாகனம்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல்
பீஜமந்திரம் : வங்
பலன்கள் : இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.