
இடம் : மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.
மூலக்கூறு : பூமி
ஆண் தெய்வம் : பிரம்மா, இவர் படைப்பவர், கோதுமை நிற மேனியுடன் மஞ்சள் நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். இவரின் மேற்புற இடக்கையில் தாமரை மலரும், கீழ்ப்புற இடக்கையில் புனித வேதத்தையும், மேற்புற வலக்கை அபாய முத்திரையையும், கீழ்ப்புற வலக்கை அமுதம் உள்ள பாத்திரத்தையும் கொண்டுள்ளது.
பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் டாகினி/தாகினி. பளபளக்கும் ரோஜா சிகப்பு வண்ணத்தினையும், நான்கு கரத்தினையும் கொண்டவள். மண்டையோடு, வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
மிருகம் : வினாயகர், யானை முகம் கொண்டவர்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறுநீரகம், சிறுநீரகப்பை
பீஜமந்திரம் : லங்
பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும். இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.