தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை
ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள்,
இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி
காட்சி தருகின்றாள்.
தியான சுலோகம்:-
சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம். |
பலன்கள்:-
மேற்கூறிய சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம், அத்துடன், இவளை உண்மையுடன் வழிபட்டவர்களின் வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும் என்பது உறுதி. பொதுவாக, அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.