No results found

    வேலை நிறுத்த நாளில் ஏற்பட்ட நஷ்டத்தை டிரைவர்-கண்டக்டர்களிடம் பிடித்தம் செய்ய முடிவு: கேரள அரசு நடவடிக்கை

    கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் 3 பணிமனைகளில் 49 டிரைவர்கள் மற்றும் 69 கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த பணிமனைக்கு ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கீட்ட அரசு அந்த தொகையை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் 5 சம தவணைகளில் பணத்தை பிடித்தம் செய்ய மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரின் கணக்கில் இருந்து 5 தவணைகளாக ரூ.40 ஆயிரத்து 277 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Previous Next

    نموذج الاتصال