No results found

    குஜராத்தில் ஸ்மிருதி வான் நினைவிடம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    குஜராத்தின் கட்ச் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் வகையில் ஸ்மிருதி வான் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 2001-ம் ஆண்டு பூஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 13,000 பேர் இறந்ததைத் தொடர்ந்து, இந்த நினைவகம் கிட்டத்தட்ட 470 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் நிலநடுக்கத்தின்போது உயிரிழந்த மக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிநவீன ஸ்மிருதி வான் பூகம்ப அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    மேலும், இந்த அருங்காட்சியகத்தில் குஜராத்தின் நிலப்பரப்பு, 2001 பூகம்பத்திற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மற்றும் அதன் வெற்றிக் கதைகளை காட்சிப்படுத்துகிறது. பல்வேறு வகையான பேரழிவுகள் மற்றும் எதிர்காலத்தில் எந்த வகையான பேரழிவுக்கான தயார் நிலையையும் இது தெரிவிக்கிறது. இதைத்தவிர குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال