குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கதர் நூல் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்து அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை வரலாறு கண்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளை நாட்டின் சுயமரியாதைச் சின்னமாக மகாத்மா காந்தி மாற்றினார். சுதந்திரத்திற்குப் பிறகு அதே கதர் ஆடை தரக் குறைவான பொருளாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக, கதர் உற்பத்தியுடன் தொடர்புடைய கிராமத் தொழில் அழிக்கப்பட்டது, அது எங்கள் நெசவாளர்களைப் பாதித்தது சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு 7,500 பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ராட்டைகளை சுற்றி புதிய சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் உறுதிமொழியை நிறைவேற்றவும், தன்னம்பிக்கை இந்தியா என்ற கனவை அடையவும் கதர் ஆடை உற்பத்தி ஒரு உத்வேகமாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தன்னம்பிக்கை இந்தியா என்ற இலக்கை அடைய கதர் ஆடை உற்பத்தி உத்வேகமாக மாறும்: பிரதமர் மோடி
Tamil News