No results found

    சாக்லேட் வாங்கிக் கொடுத்து பலாத்காரம்... பள்ளிக்குள் 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

    கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக காவல்துறை தொடர் நடவடிக்கைகள் எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை அருகே சாக்லேட் வாங்கிக் கொடுத்து யுகேஜி மாணவியை பள்ளி தாளாளரின் கணவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போளூர் அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைத்னர். இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, பள்ளி தாளாளரின கணவர் காமராஜ், சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும் காமராஜ் தலைமறைவானார். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து கண்காணித்தபோது, அவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال