No results found

    தொடர்ந்து சாதனை படைக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினையும் தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மூன்று விருதுகளையும் பெற்றது.

    மாமனிதன் படக்குழு இந்நிலையில், "மாமனிதன்" திரைப்படம் மீண்டும் ஒரு விருதினை பெற்றுள்ளது. அதன்படி, 16-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது. மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் சீனுராமசாமி பகிர்ந்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال