No results found

    பிரபல நடிகரின் படத்தில் பாடிய கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

    அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'கணம்' படத்தின் அடுத்த பாடலான 'மாரிபோச்சோ' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال